ஆஸ்திரேலியா நாட்டின், சிட்னி நகரில் நடைபெறவுள்ள 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பயணம் மேற்கொண்டார். அவரை சென்னை விமான நிலையத்தில் சட்டமன்ற முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக அப்பாவுவை நேற்று சந்தித்து சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.