தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாக தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகளை கனிமொழி கருணாநிதி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நெய்தல் திருவிழாவில் ஒரு பகுதியாக தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதிகளை தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் பணிகளை பாராளுமன்ற திமுக குழு தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சி தலைவர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், அனைத்து மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.