மாநகராட்சியுடன் மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தை இணைக்க கோரிக்கை

78பார்த்தது
தூத்துக்குடி மாநகராட்சியுடன் மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தை இணைக்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மகளிர் கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு


தூத்துக்குடி மாநகராட்சி உடன் மாப்பிள்ளை யூரனி பஞ்சாயத்து உள்ளிட்ட ஐந்து பஞ்சாயத்துகளை இணைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மழை வெள்ளத்தின் போது மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து கடுமையாக பாதிக்கப்பட்டது அப்போது பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் முறையான நடவடிக்கை எடுத்து மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்

இதைத் தொடர்ந்து மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த மகளிர் கூட்டமைப்பு சார்பில் நூற்றுக்கணக்கான பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட நிர்வாகம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தை மாநகராட்சி உடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி