சென்னை புளியந்தோப்பில் உள்ள பிரியாணி கடையில், போதையில் சிலர் தகராறில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலில் பேரில் இரவு ரோந்து போலீஸார் அங்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு தகராறில் ஈடுபட்ட 4 பேரிடம் விசாரித்தனர். வாக்குவாதம் ஏற்படவே அவர்களை ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர் காவலர் நிஜித்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.