சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்துவரும் சூழலில் ஆயுதமேந்திய படைகள் பாலியல் வக்கிரங்களை போர் தந்திரமாக பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. துணை ராணுவப்படையினரால் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மேலும் 130-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற அதிர்ச்சி தகவலை நைஜீரிய செய்தி சேனல்கள் வெளியிட்டுள்ளன.