தூத்துக்குடி: மாவட்ட ஹாக்கி போட்டியில் பங்கேற்க அழைப்பு
தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்க டிசம்பர் 10ஆம் தேதிக்குள் அணிகள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி நடத்தும் தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில் கலந்துகொண்டு விளையாட உள்ள அணிகள் தங்களுடைய அணி பெயர்களை 94862-49920, 94883-81677, 82486-43117, 99654-50521 என்ற கைபேசி எண்ணில் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் (பொறுப்பு) மணிமாறன், செய்லர் (பொறுப்பு) சந்தனராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.