தூத்துக்குடியில் உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தன்பாடு உப்பு மூட்டை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தாங்கள் சிறு சிறுக சேமித்த பணத்தை சங்கத்தின் பொது செயலாளர் என்ற முறையில் மேயர் ஜெகன் பெரியசாமி போனஸாக வழங்கினார். விழாவில் பேசிய மேயர் "இந்த சங்கத்தில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான, எனது தந்தை பெரியசாமி பொதுச் செயலாளராக இருந்த பொழுது சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்காக, அவர்களின் நலனில் அக்கறை கொண்டும், அவர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.
அதனை இன்று வரை எனக்கு முன்பு இருந்த நிர்வாகிகளும், நாங்களும் கடை பிடித்து வருகிறோம். உப்பு மூட்டை சுமக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது உண்மையாகவே என் உள்ளம் மகிழ்ந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் , பொருளாளர் ஆறுமுகநயினார், மாவட்ட கழக பொருளாளர் சுசீ ரவீந்திரன், பொது குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், செயற்குழு உறுப்பினர் ராஜா, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்ட செயலாளர் ராஜாமணி, சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.