தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல தட்டாப்பாறை கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் அரசினர் குழந்தைகள் இல்லம் கட்டும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலதட்டப்பாறை கிராமத்தில் உள்ள வ. உ. சி
நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைதுறை
சார்பில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய அரசினர் குழந்தைகள் இல்லம் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளது இந்த பணிகளை
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி. சண்முகையா
அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பணிகள் தொடங்கின இந்த பணிகள் 6 மாத காலத்தில் நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்த நிகழ்ச்சியில்
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வி
தூத்துக்குடி மேற்கு ஒன்றிய திமுக சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்