துபாயில் நடிகர் மாதவன் ரூ. 14 கோடிக்கு சொகுசு படகு ஒன்றை வாங்கியுள்ளார். சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட துபாய் சென்ற மாதவன், அவரது மனைவி சரிதா மற்றும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி ஆகியோர் சொகுசு படகில் அரட்டை அடித்தபடி இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. அப்போதுதான் இந்த படகு, மாதவனுக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. துபாயில் ஏற்கனவே வீடு வைத்திருக்கும் மாதவன், விடுமுறையை கொண்டாட அங்கு சென்றுவிடுவார்.