தூத்துக்குடி: கடற்கரை சாலையில் மறுசீரமைப்புப் பணிகள் - ஆட்சியர் தகவல்

85பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பரவதி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. 

பல இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் எல்லாம் வடிந்துள்ளது. 14ஆம் தேதி இரவு நிலவரப்படி மாவட்டத்தில் 474 இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. நேற்றையதினம் 292 இடங்களாக இருந்தது, இன்றையதினம் 100 இடங்களுக்கும் கீழ் குறைவாகவே உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரு சில வார்டுகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. மாநகராட்சியின் தீவிர நடவடிக்கையாக மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை 100க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் மூலமாக பங்களூர் ஓடையில் வெளியேற்றப்பட்டு கடலில் கலப்பதற்கு ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், 14ஆம் தேதி பொறுத்தமட்டில், எட்டு இடங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதில் நேற்றைய தினம் ஒரு சாலையில் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அனைத்து சாலைகளும் சரியாகி உள்ளது. ஏரல் தரைப்பாலத்தின் வழியாக தாமிரபரணி ஆற்றிற்கு செல்லக்கூடிய தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக மருதூர் அணைக்கட்டுக்கு இன்று வரக்கூடிய தண்ணீரின் அளவு 5648 கனஅடியாகவும்," என்றார்.

தொடர்புடைய செய்தி