தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தில் அன்பு உள்ளங்கள் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது.
இந்த இல்லத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற முதியோர்கள் தங்கும் வகையில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதியோர் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முதியோர் இல்லம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. பாராளுமன்ற திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு முதியோர் இல்லத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.