தூத்துக்குடி: கனமழை இரவு நேரத்திலும் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

60பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையை தொடர்ந்து இரவு நேரத்திலும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவதி, தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. 

இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் காட்டாற்று வெள்ளம் பல கிராமங்களை சூழ்ந்துள்ளது. இங்குள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவதி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்புள்ள பக்கிள் ஓடை, புதுக்கோட்டை உப்பாற்று ஓடை உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு நீரின் வரத்து குறித்து கேட்டறிந்தனர். 

தொடர்ந்து மழைநீர் சூழ்ந்துள்ள கூட்டுடன்காடு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும் இந்த கிராமத்தை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் தொடர்ந்து இரவு முழுவதும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் க

தொடர்புடைய செய்தி