தூத்துக்குடி: ஊர்க்காவல் படையில் 10 பேருக்கு எஸ்பி பாராட்டு சான்றிதழ்

83பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 வருடங்கள் பணி நிறைவு செய்த 10 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஊர்க்காவல்படையில் சேர்ந்து சேவை மனப்பான்மையுடனும் தன்னார்வத்துடனும் 20 வருடங்கள் சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படை வீரர்களுக்கு அவர்களது 20 வருட சிறப்பான பணியினை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்குமாறு குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல்படையில் சேர்ந்து 20 வருடம் சிறப்பாக பணிபுரிந்த 10 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி அவர்களது பணி சிறக்க வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். இந்நிகழ்வின்போது ஊர்க்காவல் படை வட்டார தளபதி பாலமுருகன், ஊர்க்காவல் படை காவல் சார்பு ஆய்வாளர் ராஜதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி