தமிழக தொடக்கக் கல்வித்துறை அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, 30 நாள் சான்றிதழ் படிப்பை, பெங்களூரில் உள்ள, ரீஜினல் இன்ஸ்டி டியூட் ஆப் இங்கிலிஷ் மையம் வழங்க உள்ளது. இதற்கு, தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களில் ஆர்வம் உள்ளவர்களில், கல்வி மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தமிழகம் முழுதும், 50 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு வரும், ஜன.16 முதல், பெங்களூரில் உண்டு உறைவிட பயிற்சி, 30 நாட்கள் வழங்கப்படும்.