கல், செங்கல், சாக்பீஸ், மண், பேப்பர் என உண்ணத்தகாத பொருட்களை உண்ணும் பழக்கம் பிகா (PICA) என அழைக்கப்படுகிறது. இப்படியொரு பழக்கம் உங்களுக்கு இருப்பது என்பது உடலில் ஏதோ சத்துக்குறைபாடு இருப்பதற்கான அடையாளம். இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் என ஏதோ ஒரு சத்துக் குறைபாட்டின் காரணமாகவே கண்ட பொருட்களையும் சாப்பிடத் தோன்றும். பாதிக்கப்பட்ட நபர் யார் என்பதைப் பொறுத்து இதற்கான சிகிச்சை வேறுபடும்.