தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் - பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பி அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பங்கேற்பு தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பாராளுமன்ற திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டப்பணிகள், பிரதம மந்திரி முன்னோடி கிராமத் திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தேசிய கால்நடை இயக்கம் தொழில் முனைவோர் உருவாக்கல் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், சத்துணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளில் தற்போது வரை நடந்துள்ளவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, முடிக்கப்படாத திட்டங்களை விரைந்து முடிக்கவும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.