கூட்டணிக்காக செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோபமாக பதிலளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அரசியல் விமர்சகர்கள் ஆயிரம் சொல்வார்கள். அதெல்லாம் நடக்குமா? இன்னும் தேர்தலுக்கு 1 ஆண்டுகள் உள்ளது. தமிழகத்தில் எத்தனை கட்சிகள் உள்ளது? ஏன் எங்களைப்பற்றி மட்டும் ஊடங்கங்கள் பேசுகிறது. அதிமுக பிரியவில்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்" என்று காட்டமாக பதிலளித்தார்.