மன்னார்குடி - Mannargudi

வீடியோஸ்


திருவாரூர்
Nov 16, 2024, 01:11 IST/

மருத்துவமனையில் தீ விபத்து..10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

Nov 16, 2024, 01:11 IST
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் வார்டில் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதிலிருந்து 37 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.