மன்னார்குடி கைலாச நாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது 9 நாட்கள் நடைபெறும் விழாவில் முருகன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். 5 வது நாளான நேற்று ரிஷப வாகனத்தில் முருகன் எழுந்தாருளினார். மன்னார்குடி நகரின் முக்கிய வீதிகளில் சுவாமி உலா வந்தார். மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து பக்தர்கள் முருகன் அருள் பெற்றனர். இன்று இரவு கந்த சஷ்டி விழா நடைபெற உள்ளது.