மன்னார்குடி பகுதியில் நேற்று பகல் நேரம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான தூறல் மழை பெய்தது இந்நிலையில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகளிலும் தாழ்வாளர் பகுதிகளிலும் வயல்வெளிகளிலும் மழை நீர் தேங்கத் தொடங்கியுள்ளது. அதிகாலை 7 மணிக்கு மழை பெய்து சற்று ஓய்ந்த நிலையில் கரு மேகங்கள் சூழ்ந்து தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்களும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியரும் சிரமத்திற்கு ஆளாகினர்.