மன்னார்குடியில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொல்லப்படாமல் இருந்த பல்வேறு திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. மன்னார்குடி மக்களின் நீண்டகால கோரிக்கைகள் பலவும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் ஏற்கனவே அமைந்திருக்கும் மன்னார்குடிக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்க தொட்டிக்கு அருகே இன்று மற்றொரு புதிய போர்வெல் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனை மன்னார்குடி நகர மன்ற தலைவர் மன்னை சோழராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது வார்டு கவுன்சிலர் நகர மன்ற துணைத் தலைவர் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.