மன்னார்குடி நகர் பகுதியில் கடந்த பத்தாண்டிற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட பல்வேறு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணி முதல் சிறிய மழைநீர் வடிகால் வரை தற்போது மறு கட்டமைப்பு செய்யப்பட்ட வருகிறது இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி யானை விழுந்தான் குளம் அருகே ஹனிபா நகரில் உள்ள பூங்கா பழுதடைந்து புதர் மண்டி காட்சியளிக்கிறது இதனை மன்னார்குடி நகர மன்ற தலைவர் மன்னை சோழராஜன் அதிகாரிகள் கவுன்சிலர் மற்றும் நகர மன்ற துணைத் தலைவருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் இங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் விவாதித்தார்.