திருவள்ளூர்: கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சியில் கல்குவாரி குட்டையில் இதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளர் ஆறுமுகம் மற்றும் முருகேசன் ஆகிய இவர்கள் இருவரும் அண்ணன், தம்பிகளான இவர்களது இரண்டு குழந்தைகளான கிரிநாத் மற்றும் பிரவீன் ஆகிய 10 வயதாகிய இருவரும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று(நவ.21) மாலை அதே ஊரில் உள்ள கல்குவாரி குட்டையில் கால் கழுவ சென்றவர்கள் தவறி குளத்தில் உள்ளே விழுந்து பலியானார்கள். இதனையடுத்து உறவினர்கள் இரண்டு குழந்தைகளையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்குவாரி குட்டையில் கால் கழுவ சென்ற இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.