திருத்தணியில் ஒரு மாதத்தில் 36 பைக் திருட்டு

61பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சமீப காலமாக திருத்தணி முருகன் மலைக்கோவில், பொது இடங்கள், கடையின் முன்பு வீட்டின் முன்பு என பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகள் திருடப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருத்தணி கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது இரு சக்கர வாகனத்தை தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றுள்ளார். பின்னர் காலை வெளியே வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் திருடுபட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதேபோல் அதன் அருகில் ராஜேந்திரன் என்பவர் ஸ்வீட் பேக்கரி மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையை உடைத்து உள்ளே புகுந்து கடையில் இருந்த 24 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே இரவில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருத்தணியில் 36 பைக்குகள் திருடு போனதாக புகார் பதிவாகி இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனம் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி