முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 5-ஆம் நாளான இன்று காவடி மண்டபத்தில் சண்முகருக்கு சிறப்பு அலங்காரத்தில் லட்சார்ச்சனை பூஜைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகன் மாலை அணிவித்தம் விரதம் இருந்தும் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளை 6-ஆம் நாள் மாலை அனைத்து முருகன் கோவிலிலும் சூரசம்காரம் நடைபெறும் ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் டன் கணக்கில் வண்ண வண்ண மலர்களால் புஷ்பா அஞ்சலி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால் விழா ஏற்பாடுகள் கோவில் அறங்காவலர் குழு ஸ்ரீதரன் கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.