அதானியுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லையென தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அறிக்கையில், அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டிய நிலையில் நெருப்பில்லாமல் புகையாது. அதானி குழுமத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஊழல் புகாரை மறைத்தாலும் உண்மை நிலை என்ன? என்பது பற்றி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.