திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அரக்கோணம் சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நர்பத் என்பவர் பிளாஸ்டிக் டப்பா, பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது கடையில் சோதனைகளில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள் பிளாஸ்டிக் பை பயன்படுத்தியதாக ரூபாய் 300 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனைத் தொடர்ந்து வந்த நகராட்சி ஊழியர்களுக்கு தீபாவளி அன்று இனிப்பு பாக்ஸ் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். வட மாநில வியாபாரி. அதனையும் தொடர்ந்து வந்த நகராட்சி அதிகாரிகள் உங்கள் கடைக்கு விற்பனை வரி கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். நான் தற்பொழுது உடல்நலம் சரியில்லாமல் இந்த ஆண்டு கால தாமதமாக தான் கடையைத் திறந்தேன், நீண்ட நாட்கள் கடை விடுமுறை இருந்தது ஆகையால் விற்பனை வரி செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார். ரூபாய் 300 விற்பனை வரி உன்னால் செலுத்த முடியாதா என்று கூறி கடை முன்பு திருத்தணி நகராட்சி அதிகாரிகள் துர்நாற்றம் வீசும் குப்பைகளை கொட்டியுள்ளனர். 300 ரூபாய் வரி தொகை செலுத்தவில்லை என்று குப்பைகளை கொட்டி வியாபாரியிடம் நகராட்சி ஊழியர்கள் வரி வசூல் செய்துள்ளனர். குப்பைகளை கடையின் முன்பு கொட்டும் சி. சி. டி. வி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்பட்டுள்ளது