திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில். முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கி ஐந்தாம் நாள் ஆன இன்று திரைப்பட நடிகர் தம்பி ராமையா தனது மனைவி மகன் மகள் ஆகியோருடன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதம் வழங்கினர்.