திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பஜாரில் எச். டி. எப். சி என்ற தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. அந்த ஏடிஎம் மையத்தில் தினமும் வங்கி ஊழியர்கள் பணம் நிரப்பி வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி பணம் எடுகக் ஏதுவாக ஏடிஎம் மிஷினில் ரூ. 10 லட்சம் வரை நிரப்பி வைப்பது வழக்கம். இதனால் கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து பயனடைந்து வந்தனர். இந்நிலையில், மாலை திடீரென்று ஏடிஎம் மையத்தில் மின்கசிவு ஏற்பட்டதில். தீ பற்றிக் கொண்டு ஏடிஎம் மையம் முழுவதும் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தககல் தெரிவித்தனர். திருத்தணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இருப்பினும் ஏடிஎம் மையம் முற்றிலும் எரிந்து நாசமானது. ஏடிஎம் மிஷினில் வைக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் தீயில் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கனகம்மாசத்திரம் பஜார் பகுதியில் ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.