திருத்தணி: தனியார் பேருந்து ஆந்திர பேருந்து மோதி விபத்து

62பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வள்ளியம்மா புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரில் நெடுஞ்சாலைத்துறை சிறிய பால கட்டுமான பணி நடைபெறுகிறது இது ஆமை வேகத்தில் நடைபெறுவதால் இந்த பகுதியில் 100 அடி சாலை 20 அடி சாலையாக உள்ளது இந்த பகுதியை யார் முந்தி செல்வது என்று காஞ்சிபுரத்தில் இருந்து வந்த ஆந்திர மாநிலம் பேருந்து மற்றும் திருத்தணியில் இருந்து காஞ்சிபுரம் சென்ற தனியார் பயணிகள் பேருந்து மோதிக்கொண்டதில் தனியார் பேருந்து அதிவேகமாக வந்ததால் சாலை ஓரம் இருந்த இரும்பு தடுப்புகளில் மீது மோதி ஆந்திர மாநிலப் பேருந்தில் மோதியதில் இதில் இரண்டு பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் இரண்டு பேருந்திலும் 80க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர் இவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார் விரைந்து செயல்பட்டு இந்த பகுதியில் ஒரு மணி நேரம் போராடி போக்குவரத்தை சரி செய்தனர் விபத்திற்கு காரணமான இரண்டு பேருந்துகளையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விபத்திற்கு காரணமான தனியார் பயணிகள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்தினர் தப்பி ஓடி உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி