குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பீய்ச்சி அடித்து குடிநீர்

59பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் பைப்லைன் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் பகுதியில் உள்ள சாலையில் குடிநீர் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு பீய்ச்சி அடித்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பீய்ச்சி அடிக்கும் தண்ணீரில் நனைந்தபடி செல்கின்றனர். எனவே பைப்லைன் உடைப்பு ஏற்பட்ட பகுதியை உடனடியாக சரி செய்து குடிநீர் வீணாகாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக செல்வோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி