முருகன் கோயிலில் சஷ்டி கோலாகலம்-ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

60பார்த்தது
ஆறுபடைகளில் ஐந்தாம் படை வீடான

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து மறுநாளில் இருந்து, ஏழு நாட்களுக்கு கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெறும். கடந்த சனிக்கிழமை கந்தசஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகின்றது.  



விழாவையொட்டி மூலவருக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது. அதே போல் காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் சண்முகருக்கு காலை, 10: 00 மணி முதல், இரவு, 8: 00 மணி வரை தொடர்ந்து லட்சார்ச்சனை, தீபாராதனை நடைபெற்று வருகிறது. ஏராளமான முருகன் பக்தர்கள் முருகன் மாலை அணிந்து சஷ்டி விரதமிருந்து வழிபட்டு வருகின்றனர்.  



தினமும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் பள்ளி மாணவர்களின் பரத நாட்டியம் பக்தர்களை கவர்ந்து வருகின்றது.  



விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கந்த சஷ்டி முன்னிட்டு இன்று அதிகாலை முதலே மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.   நீண்ட நேரம் மலைக்கோயில் மாட வீதிகளில், பொது வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்.  



இன்று மாலை 5 மணிக்கு காவடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த சண்முக பெருமானுக்கு அனைத்து வகையான மலர்களால் புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி