ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று
(நவ., 22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக பெய்த மழைநீர் பள்ளிகளில் தேங்கியுள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை கடந்த 3 நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் நாளை (நவ., 23) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.