ஏடிஎம் மையம் தீ விபத்து பகுதியில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு.

74பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கனகம்மா சத்திரம் பஜார் பகுதியில் எச்டிஎப்சி தனியார் ஏடிஎம் மையம் பச்சப்பன் என்பவரது கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.   இந்த மையத்தில் திடீரென்று நேற்று மாலை 6 மணி அளவில் முதலில் லேசாக புகை வந்த நிலையில்  திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த ஏடிஎம் அருகில் இருந்த கடைகள் மூடப்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தும் வருவதற்கு கால தாமதமானதால் ஏடிஎம் மையம் முற்றிலும் எரிந்து நாசமான நிலையில் தீயை மேலும் பரவாமல் தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனைடுத்து தீவிபத்துக்கான காரணம் குறித்து கைரேகை நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மின்கசிவால் இந்த தீவிபத்து நிகழந்ததா. அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீயிட்டு கொளுத்தினார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி