திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகள் உள்ளன. பொதுமக்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினந்தோறும் திருத்தணி நகராட்சி மார்க்கெட் பகுதி, ரயில் நிலையம் மற்றும் அரக்கோணம் சாலையை கடந்து செல்ல வேண்டும். இப்படி கடந்து செல்லக்கூடிய பொது மக்களுக்கு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மார்க்கெட் அருகில் உள்ள காந்தி சிலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் சாலையோர வியாபாரிகளும் ஆக்கிரமிப்பு செய்திரும்மதால் பொதுமக்கள் இந்த தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கு திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தீபா தலைமையில், திருத்தணி நாகர மன்ற தலைவர் சரஸ்வதி, போக்குவரத்து துறை அதிகாரிகள், சட்டம் ஒழுங்கு காவல்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனைத்து கட்சியினர், மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி ஏகமனதாக காந்தி சிலையை சாலையில் உள்ள இந்த சிலையை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பத்திரமாக இந்த பகுதியிலிருந்து அகற்றி புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள அரக்கோணம் சாலையில் அமைப்பதற்கு இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அனைத்து துறை அதிகாரிகளும் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.