ஊத்துக்கோட்டை: குட்கா கடத்திய ஊராட்சி செயலர் கைது
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள விஷ்ணுவாக்கம் ஊராட்சி செயலாளர் தசுருதின் இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா புகையிலைப் பொருட்களை ஆந்திர மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்தபோது இவரை ஊத்துக்கோட்டை போலீசார் கைது செய்து இவரிடமிருந்து 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்து போலீசார் குட்கா கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஊத்துக்கோட்டை வழியாக சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குட்காவை கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்தது. ஊராட்சி செயலராக பணிபுரிந்த தஸ்ருதீன் குட்காவை கடத்தி விற்பனைக்கு கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்ட சம்பவம் ஊத்துக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.