தமிழ்நாட்டில் 2024-ம் ஆண்டில் 75,800-க்கும் மேற்பட்டோர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது, காசநோயால் பாதிக்கப்படுபவர்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காசநோய் வர வாய்ப்பு அதிகம் உள்ள சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக 84% பேர் முதல் சிகிச்சையிலேயே குணமடைவதாக கூறினர்.