பஞ்சமி நிலத்தை மீட்க போராட்டம் நடத்துவோம்: மாவட்ட நிர்வாகம் ஆங்கிலேயர்கள் ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கிய பஞ்சமி நிலங்களை மீட்பதில் மெத்தனமாக செயல்படுகிறது என விசிக வினர் குற்றச்சாட்டு
ஒரு சென்ட் நிலம் கூட இல்லாமல் விளிம்பு நிலையில் தவித்த பட்டியல் இனத்தவர்களின் நலன் கருதி ஆங்கிலேயர்கள் விக்டோரியா மகாராணி ஒப்புதலில் பஞ்சமி நிலங்கள் அப்போதைய ஆங்கிலேயர் காலத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் முயற்சியால் நிலம் அற்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழங்கப்பட்டன அந்த நிலங்கள் தற்போது ஒன்று கூட உரியவர்களிடம் இல்லாமல் அபகரிக்கப்பட்டுள்ளது என்றும் இதை கணக்கிட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அரசியல் குழு தலைவர் மாவட்ட ஆட்சியர் நல குழு உறுப்பினரான நீல வானத்து நிலவன் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமாரிடம் மனு அளித்தனர் இதில் மாநில பொறுப்பாளர் செஞ்சி செல்வம் பூண்டி இளவரசு பூண்டி ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் திரண்டு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் வசம் 800 ஏக்கர் பஞ்சமி நிலம் எங்கே? பட்டியலை வெளியிடுங்கள் என கேட்டு மனு அளித்துள்ளனர்.