தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஊடக விவாதங்களை எப்படி அணுக வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்தது. அதில், ஊடக விவாதங்களின் போது தனி மனித தாக்குதல் நடத்தக்கூடாது என விஜயின் அறிவுரைப்படி புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். மேலும் எதிர் கருத்துக்களுக்கு கண்ணியமான முறையில் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறினார்.