குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டத்தை கையில் எடுத்து அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதை ஏற்க முடியாது என கூறிய நீதிபதிகள், வழக்கில் தண்டனை பெற்றவரின் வீடுகளையே இடிக்கக்கூடாது என்ற நிலையில், குற்றம்சாட்டினாலே வீடுகளை எப்படி இடிக்கலாம்? என கேள்வியெழுப்பினர்.