சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பாலாஜி என்ற மருத்துவரை, 25 வயது இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட மருத்துவர், அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு வருவது போல் வந்து மருத்துவரை கத்தியால் குத்தியது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடக்கிறது. தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி மருத்துவரை குத்தியதாக குற்றவாளி போலீசிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.