2026-ல் திமுக கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இறங்கியுள்ளார். டெல்லி சென்றுள்ள வாசன், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தவெக, தமாகா மற்றும் புதிய தமிழகம் கட்சிகளை ஓரணியில் கொண்டு வர முயற்சித்து வருவதாக வாசனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். எதிரணி பலமானால் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்று கணக்கு போட்டு வாசன் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளாராம்.