கும்மிடிப்பூண்டி, பெரிய ஒபுளாபுரம் ஊராட்சி நாகராஜ் கண்டிகை, சின்ன ஒபுளாபுரம், காய்லர்மேடு, துராப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஏக்கரில் நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை காலத்திற்கு ஏற்றார் போல் விவசாயம் செய்து வருகின்றனர் பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில் அரசு நிலங்கள் சுமார் 60 ஏக்கருக்கு மேல் உள்ளது. விவசாயம் பயிர்களை செய்து வருகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சொந்தமான குளம், கால்வாய் என பல்வேறு வகைபாடுகள் உள்ளது, நேற்று பெரிய ஒபுளாபுரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி பின்புறம் நீர் பாசன ஏரி உள்ளது.
இந்த ஏரியை ஒட்டி உள்ள விளைநிலங்களில் சில விவசாயிகள் நெல்பயிர் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்
இதனை அகற்றக் கோரி சம்பத் என்பவர் அரசுக்கு சொந்தமான இடத்தில் விவசாயிம் செய்து வரும் நிலத்தை அகற்றக்கோரி புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது
புகாரின் பேரில் போலீஸ் உதவியுடன் உதவி பொறியாளர் கண்ணன் தலைமையில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் ஜேசிபி எந்திரங்களுடன் விவசாயம் செய்து வந்துள்ள நிலங்களை அகற்ற வந்தனர், விவசாயிகள், இளைஞர்கள், கவுன்சிலர் வரை ஒன்றிணைந்து அதிகாரிகளிடம் நாங்கள் தற்போது நெற்பயிர் வைத்துள்ளோம்
எங்களுக்கு கலஅவகாசம் வழங்க வேண்டுமென கூறி வலியுறுத்தினர் அதிகாரிகள் மறுத்து வந்த நிலையில் விவசாயிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.