கேரள மாநிலத்தின் கோட்டயத்தில் கடந்த திங்கட்கிழமை (நவ. 11) அன்று அங்கிருந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்த முதியவர் ஒருவர் பணம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது கண்ணாடியை உடைத்து கொண்டு ஏ.டி.எம்-க்குள் காட்டுப்பன்றி ஒன்று அதிவேகத்தில் புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த முதியவர் சிறிதும் தாமதிக்காமல் வெளியில் ஒடினார். இந்த சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது.