திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி சூரியதேவ் இரும்பு உருக்கு ஆலையில் கடந்த எட்டாம் தேதி பாய்லர் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் தீபக் குமார் சிங் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றும்
பீகரைச் சார்ந்த சிவம் குமார் என்பவர் படுகாயம் அடைந்து அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தீபக் குமார் சிங் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிபூண்டி சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே தொழிற்சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி வெல்டிங் தொழில் பணிபுரிந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மிதுன் மண்டல் 31 வயது, டெபாசியா புயனா இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் தற்போது பாய்லர் வெடித்து உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரும்பு உருக்கும் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு இது போன்று வட மாநில தொழிலாளர்கள் உயிரிழப்பதாகவும் தொழிற்சாலையில் காவல்துறையினர் விபத்து நடந்த பகுதியில் நேரில் விசாரணை மேற்கொண்டு தொழிற்சாலை நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.