கும்மிடிப்பூண்டி: 200க்கும் மேல் சென்றது காற்று மாசு குறியீடு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை தொழிற்சாலைகளால் மாசடைந்துள்ள நிலையில் பட்டாசுகள் வெடித்ததில் மேலும் காற்று மாசு அதிகரிப்பு காற்றின் தரக் குறியீடு 200க்கும் மேல் பதிவானதால் இன்று காலை புகை மூட்டம் பனியுடன் சேர்ந்து சுவாசிக்க முடியாத அளவிற்கு மோசமான நிலையில் காணப்படுகிறது. காற்றின் தர குறியீடு மோசம் அடைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் மணலியில் காற்று தர குறியீடு 254 ஆக அதிகரிக்கும் என்றும் சென்னை அரும்பாக்கம் பெருங்குடி பகுதிகளில் 200 ஐ கடந்து உள்ளது என தகவல். வயதானவர்கள் சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் வீட்டிலேயே பத்திரமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.