மநீம கட்சி தலைவராக கமலஹாசன் மீண்டும் தேர்வு!

63பார்த்தது
மநீம கட்சி தலைவராக கமலஹாசன் மீண்டும் தேர்வு!
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள காமராஜர் அரங்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (21-09-24) நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 25இல் இருந்து 21ஆக குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி