திருவனந்தபுரம் மாவட்டத்தில் மஞ்சாதிநின்னாவிளையில் புதிய வகை ஊசி தட்டான் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது 'அகத்தியமலை மூங்கில் வால்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது மூங்கில் வால் இனத்தைச் சேர்ந்த ஒரு ஊசித்தட்டான் வகையாகும். இந்த இனத்தில் உள்ள மற்றொரு இனம் 'மலபார் மூங்கில் வால் ஊசித் தட்டான்' ஆகும். இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் கூர்க் வயநாடு ஆகிய நில பரப்புகளில் காணப்படுகிறது.