செய்த தவறுக்கு பரிகாரம் தேடுபவர்கள் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதரை தரிசிக்க பாவங்கள் தீரும். ராவணனின் மகன் புஷ்பக விமானத்தில் வந்து இப்பகுதியில் இருந்த சிவலிங்கத்தை எடுத்துச் செல்ல முயன்ற போது மயங்கி விழுந்துள்ளான். இதையறிந்த ராவணன் இத்தலத்திற்கு வந்து, மகனின் குற்றத்தை பொறுத்தருள வேண்டியதாகவும், சுவாமியும் மன்னிப்பு அருளவே 'குற்றம் பொறுத்த நாதர்' என பெயர் பெற்றதாகவும் தல வரலாறு கூறுகிறது.