அம்பை: திமுக வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாவட்டம் அம்பை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயிலில் இன்று (நவம்பர் 26) இந்திய அரசியலமைப்பினை ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டு தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் முகப்புரையை தமிழிலும் ஆங்கிலத்திலும் திமுக வழக்கறிஞர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு திமுக வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராஜேந்திரன், ஜோயல் ஹென்றி தலைமை தாங்கினர். இதில் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.